• vilasalnews@gmail.com

தேர்தலுக்கு முன் 'மெகா' சலுகைகள்? நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார் தங்கம் தென்னரசு!

  • Share on

தமிழக சட்டப்பேரவையின் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (பிப்ரவரி 17) தாக்கல் செய்கிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மக்களைக் கவரும் வகையிலான பல்வேறு அதிரடி அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


கடந்த ஜனவரி 20-ம் தேதி ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரை வாசிக்காமல் வெளியேறியது, பின்னர் சபாநாயகர் அப்பாவு அதைத் தமிழில் வாசித்தது எனப் பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு இடையே கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பட்ஜெட் தாக்கலுக்காக மீண்டும் அவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.


பிப்ரவரி 17அன்று  2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது  மற்றும் பிப்ரவரி 20 அன்று முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படயுள்ளது.


சட்டப்பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும். விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும். தேர்தல் கால பட்ஜெட் என்பதால், வழக்கமான நிதி ஒதுக்கீடுகளைத் தாண்டி பொதுமக்களைக் கவரும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம். முதலமைச்சர் ஸ்டாலினின் 'உங்க கனவை சொல்லுங்க' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம். கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் நிதி ஒதுக்கீடு இருக்கும் எனத் தெரிகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் நவீன கால வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம்.


விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசே முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

2026 தேர்தல் வெறும் போர்க்களமல்ல; டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான நேரடிப் போர்– உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

விஜய்யை சுற்றி வளைக்கும் விமர்சனங்கள்... அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த திவ்யா சத்யராஜ்!

  • Share on