• vilasalnews@gmail.com

தவெக vs என்.டி.ஏ - தமிழக அரசியலில் வெடித்தது மோதல்!

  • Share on

விஜய்யின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஒன்றிணைந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


"அரசியலில் விஜய் ஒரு 'ஜீரோ'. நடிப்புத் தொழிலைத் தியாகம் செய்துவிட்டதாக அவர் கூறுவது அவரது அனுபவமின்மையையே காட்டுகிறது. நானும் ஒரு மருத்துவராகத் தொழிலைத் துறந்துதான் வந்தேன், அண்ணாமலையும் ஐபிஎஸ் பதவியை விட்டுவிட்டுத்தான் வந்தார். விஜய்யின் பேச்சுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒருபோதும் அசைக்க முடியாது." என பாஜக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


"150 ரூபாய் சினிமா டிக்கெட்டை 1,000 ரூபாய்க்கு விற்பதும் ஒருவகை ஊழல்தான். விஜய் முதலில் தனது 'பண்ணையார்' மனோபாவத்தை விட வேண்டும். நான்கு சுவர்களுக்குள் பேசாமல், வெளியே வந்து ஊடகங்களைச் சந்தித்தால் தான் உண்மை நிலவரம் புரியும்." என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .


"விஜய்யின் பேச்சுகள் வெறும் 'பில்டப்'மட்டுமே. அவர் ஒரு 'ஸ்பெஷல் ஷோ' போன்றவர்; அது நீண்ட காலம் ஓடாது. தேர்தல் களம் என்று வந்துவிட்டால் போட்டி திமுக-விற்கும் அதிமுக-விற்கும் இடையேதான்." என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் .


"விஜய் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் ஒரு ஆரம்பம்தான். வரும் நாட்களில் இன்னும் கடுமையான பதிலடிகள் காத்திருக்கின்றன." என அதிமுக மூத்த நிர்வாகி திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .


இதற்கிடையே அதிமுக ஐடி விங் ஒரு படி மேலே சென்று, விஜய்யின் படப் பெயர்களான மாஸ்டர், தலைவா, தெறி ஆகியவற்றை வைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு, "உண்மைச் சம்பவம் இனிமேல்தான் இருக்கிறது" எனத் தவெக-வை வம்பிழுத்து வருகிறது. மேலும், விஜய் ஒரு 'தற்பெருமை கொண்டவர்' என்றும் விமர்சித்துள்ளது.


இந்த ஒட்டுமொத்தத் தாக்குதல்களையும் கண்டு தவெக நிர்வாகிகள் அசரவில்லை. "தலைவர் விஜய்யின் அரசியல் எழுச்சியைக் கண்டு மற்ற கட்சிகள் அரண்டு போயுள்ளனர். அவர்களின் பயமே இந்த விமர்சனங்களுக்குக் காரணம்" எனத் தவெக தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.


2026 தேர்தல் களம் விஜய்க்கு ஒரு 'அக்னிப் பரீட்சை'யாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திராவிட மற்றும் தேசியக் கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு எதிராக அணிவகுத்து நிற்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய முக்கோணப் போட்டியை உருவாக்கியுள்ளது.

  • Share on

தடுமாறும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்... கவலை தோய்ந்த முகத்தோடு தேமுதிகவினர்!

பனையூரில் விஜய் ஆட்டம்... தூத்துக்குடியில் நயினார் காட்டம் - விஜய்க்கு 'நெத்தியடி' கொடுத்த நயினார் நாகேந்திரன்!

  • Share on