• vilasalnews@gmail.com

பனையூரில் விஜய் ஆட்டம்... தூத்துக்குடியில் நயினார் காட்டம் - விஜய்க்கு 'நெத்தியடி' கொடுத்த நயினார் நாகேந்திரன்!

  • Share on

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆற்றிய உரையும், அதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்துள்ள காரசாரமான பதிலடியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக ஆகியவற்றை கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, பாஜகவின் கூட்டணிக் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் விவாதப் பொருளாகின.


விஜய்யின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் குறித்து ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். கட்சியின் 3-ஆம் ஆண்டு விழாவில் அவர் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு டான்ஸ் ஆடத்தான் தெரியும், வேறு ஒன்றும் தெரியாது. டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பவர்கள், அதையே செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்.


அனைத்துக் கட்சிகளும் என்.டி.ஏ (NDA) கூட்டணியில் தான் இருக்கின்றன. பாஜக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் எனப் பல கட்சிகளும் எங்களுடன் உள்ளன. இது கூடத் தெரியாமல் விஜய் பேசுவது எப்படி அரசியலாகும்? என அவர் கேள்வி எழுப்பினார்.


திமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், கடந்த கால வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். கடந்த 1999-ஆம் ஆண்டு திமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணியில் இருந்தன. அப்போது திமுக, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டதா? தற்போது தமிழகத்தில் சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை திமுக அரசு 300 சதவீதம் உயர்த்தியுள்ளது. பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை, ஒன்றுமே இல்லை என்று கூறினால், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்று சாடினார்.

  • Share on

தவெக vs என்.டி.ஏ - தமிழக அரசியலில் வெடித்தது மோதல்!

தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

  • Share on