மதுரை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசியதன் மூலம் நடிகர் விஜய் கிட்டத்தட்ட அதிமுகவை அபகரிக்க தொடங்கி உள்ளார். அதிமுக வாக்காளர்களை தன் பக்கம் மொத்தமாக இழுக்க தொடங்கி உள்ளதாக பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளது.
அதிமுகவின் அடிப்படை வாக்குகள் என்பது மூன்று வகையான வாக்குகள்.
1. எம்ஜஆர் - ஜெயலலிதா வாக்குகள் .
2.திமுகவின் எதிர்ப்பு வாக்குகள்.
3.இஸ்லாமியர்கள் வாக்குகள் (பாஜகவுடன் கூட்டணி இல்லாத பட்சத்தில்) ஆகிய வாக்குகள் தான் கிடைக்கும்.
இதை மனதில் வைத்ததே நேற்று எம்ஜிஆர், இஸ்லாமியர்கள் பற்றி விஜய் பேசினார். அதோடு நிற்காமல், திமுகவையும் கடுமையாக தாக்கி பேசினார்.
நேற்று விஜய் தனது பேச்சில், கூட்டணி வைக்கலாம். கூட்டணி வச்சு தப்பிச்சிக்கலாம் என்று திமுக நினைக்கிறது, அது நடக்காது. இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி. நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. மோடிக்கு கேள்விகளை கேட்க வந்துள்ளேன். இதுதான் நீங்கள் நடத்தும் ஆட்சியா ? செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜீ அவர்களே ? மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணிய வைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜீ ? என்னதான் நேரடி, மறைமுக கூட்டம் வைத்தாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?
நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா ? இல்லை இஸ்லாமியர்களுக்கு கெடுதல் செய்யவா ? நரேந்திர தாமோதர் தாஸ் மோடியே. மக்களை ஏமாற்றியது போதும். எம்ஜிஆர் இருக்கிற வரை யாராலும் முதல்வர் ஆக முடியவில்லை. அப்படிப்பட்ட தலைவர் அவர். எம்ஜிஆர் அப்படிப்பட்ட உயர்ந்த தலைவர். எம்ஜிஆர் மிகப்பெரிய நபராக இருந்தார். அவரின் இடத்தை யாராலும் நிரப்பி முடியவில்லை.
வெற்று விளம்பர மாடல் திமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது, ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுகிறார்கள் ஸ்டாலின் அங்கிள். வெரி ராங்க் அங்கிள். மை டியர் அங்கிள் ஸ்டாலின் அங்கிள் சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா? சாரி அங்கிள், என்ன இதெல்லாம்? வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள் என்று விஜய் தாக்கி பேசினார்.
திமுக தவெக இடையே தான் போட்டி என்று விஜய் நேரடியாக பேசியதும் அதிமுக தொண்டர்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்பது போல மறைமுகமாக தனது பேச்சில் காட்டியது இருந்தாலும், இந்த பேச்சுக்கள் ஆழமாக இல்லை என்பது வேறு விமர்சனம்.
இருப்பினும், மதுரை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசியதன் மூலம் நடிகர் விஜய் கிட்டத்தட்ட அதிமுகவை அபகரிக்க தொடங்கி உள்ளார். அதிமுக வாக்காளர்களை தன் பக்கம் மொத்தமாக இழுக்க தொடங்கி உள்ளதாக பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளது.



