• vilasalnews@gmail.com

10 தொகுதிகளில் வெற்றி, 10 தொகுதிகளில் நெருக்கடி - பாஜக தலைவர் அண்ணாமலை குறி இது தான்!

  • Share on

திமுக - அதிமுகவிற்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 10 தொகுதிகளில் வெற்றி பெறவும்,  10 தொகுதியில் திமுக - அதிமுக கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

பாஜக கூட்டணியை அதிமுக முறித்து கொண்ட நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன், ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகியவை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் பாமக தேமுதிகவுடன் பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக அமைத்த மூன்றாவது அணிக்கு 18 சதவீத ஓட்டுகளும் 2 எம்பி க்களும் கிடைத்தன.  தற்போது திமுக அரசு மீதான அதிருப்தி, மீண்டும் மோடி தான் பிரதமர் என்று வரும் கருத்துக்கணிப்புகள் ஆகியவை, வரும் மக்களவைத் தேர்தலுக்கான வெற்றி சூழல் பாஜகவுக்கு சாதகமாக  உள்ளதாக கூறும் அண்ணாமலை, போட்டியிடும் தொகுதிகளில் இருந்து 10 தொகுதிகளை மட்டும் குறி வைத்து தனி கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் பாஜக தனித்துப் போட்டியிட்டு கணிசமான ஓட்டு சதவீதத்தைப் பெற்ற கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தென்சென்னை, வேலூர், கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய 10 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி அவற்றில் வெற்றி பெற வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, சிதம்பரம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ஆரணி, தூத்துக்குடி உள்ளிட்ட மேலும் 10 தொகுதிகளில் திமுக அதிமுக கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுக்கலாம் என்றும் பாஜக திட்டமிட்டுள்ளது.

ஆகவே, 10 தொகுதிகளில் வெற்றி, 10 தொகுதிகளில் நெருக்கடி என குறிவைத்து அண்ணாமலை தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிவருவதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

  • Share on

யூடர்ன் அடித்து திரும்பிய பாமக... அதிர்ச்சியில் அதிமுக - யார் பக்கம் போகிறார்கள் பாமக?

35 வருடங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் களம் காணப் போகும் சி.பி.எம்... யார் இந்த வேட்பாளர் சச்சிதானந்தம்?

  • Share on