• vilasalnews@gmail.com

மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து கொடுங்கள் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!!

  • Share on

தூத்துக்குடி பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் சரண்யா அறி அறிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளானது மாநகராட்சி, தூய்மை பணியாளர்களால் பெறப்பட்டு நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு முறையாக அகற்றப்பட்டு வருகிறது. 

திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தர வேண்டியது உபயோகிப்பாளரின் கடமையாகும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உரியவாறு மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தனித்தனியாக ஒப்படைக்க வேண்டும்.

தற்போது கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால், உருவாக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டியது அவசியமானதோடு சுகாதாரம் பேணுவதும் அத்தியாவசியமானதாகும். 

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளிலிருந்து பிரதி வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டும் குப்பைகளை தனியாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் பெறப்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க இல்லம் தேடி வரும்போது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து தராமல் மொத்தமாக தரப்படும் குப்பைகள் வாங்கப்படமாட்டாது.

மேலும் இது போன்று குப்பைகளை தரம் பிரித்து தராத நபர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதி மற்றும் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

  • Share on

முதலில் கொரோனா சவால்... அப்புறம் நீட் ரத்து தான் : கனிமொழி எம்.பி!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனை : வாலிபர் கைது

  • Share on

அண்மை பதிவுகள்