• vilasalnews@gmail.com

நாய் கடி வாங்கும் பணியாளர்கள்... தூத்துக்குடியில் பரிதாபம்!

  • Share on

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த 2 நாட்களில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த இரண்டு தினங்களாக தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அனல்மின் நிலைய உட்புற வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர்களைத் திடீரெனத் தாக்கியுள்ளன.


நேற்று, இன்று என 2 நாட்களில் மொத்தம் 14 பணியாளர்கள் நாய்கள் கடித்து குதறியதில் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன.


தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்திற்குள் நாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அனல்மின் நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

அதிமுக ஒரு மூழ்கும் கப்பல்; பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது - செல்வப்பெருந்தகை காட்டம்!

தூத்துக்குடியில் வாலிபரைத் தாக்கி நகை பறித்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on