• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வாலிபரைத் தாக்கி நகை பறித்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on

கடந்த 2011-ம் ஆண்டு வாலிபரைத் தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


தூத்துக்குடி காலங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சபரி வாசகன் (21). இவர் கடந்த 2011-ம் ஆண்டு மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு அவரிடமிருந்த தங்க நகைகள் பறிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போதைய சிப்காட் இன்ஸ்பெக்டர் வீமராஜ் தலைமையிலான போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு ஜோசப் சந்தியா மகன் பொவின்ராஜ் ( 35) , மினி சகாயபுரம் டோம்னிக் மகன்ஆக்னல் (36), பாத்திமா நகர் அலாய்சியஸ் கோஸ்தா மகன் பென்கர் (38), ஆஸ்வால்ட் மகன் இதழ்பட்டு (39) நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் (எண் 3) நீதிபதி விஜய் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி வாதாடினார்.


வழக்கின் அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி விஜய் ராஜ்குமார், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.500 அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். 

  • Share on

நாய் கடி வாங்கும் பணியாளர்கள்... தூத்துக்குடியில் பரிதாபம்!

தூத்துக்குடி : சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!

  • Share on