• vilasalnews@gmail.com

தூத்துக்குடி : சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு, நாலாட்டின்புதூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கோவில்பட்டியைச் சேர்ந்த வெற்றிசெல்வன் (29) என்பவர், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு சாட்சியங்களையும் விசாரித்த நீதிபதி (பொறுப்பு)  பிரீத்தா, இன்று தீர்ப்பினை வழங்கினார். அதன்படி, பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.10,000 அபராதமும்,வீடுபுகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2,500 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2,500 அபராதமும் விதித்து, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெகநாதன், அப்போதைய காவல் ஆய்வாளர்  சுகாதேவி, அரசு வழக்கறிஞர்  ஜானகி மற்றும் தலைமை காவலர் சுதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மதன்  பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடியில் வாலிபரைத் தாக்கி நகை பறித்த 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

  • Share on