• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வாலிபர் கொடூர கொலை : போலீஸ் விசாரணை!

  • Share on

தூத்துக்குடியில் அம்பேத்கர் நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


தூத்துக்குடி அம்பேத்கர் நகர் ஸ்டெம் பார்க் அடுத்துள்ள முல்லை நகர் கல்லறை தோட்டத்தில் ஒரு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது அதன் பெயரில் காவல் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினனர்.


கொலை செய்யப்பட்ட வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரியவந்துள்ளது.  அவரது கழுத்து முகம் பகுதிகளில் ரத்தக்காயங்கள் இருந்தன. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்?  என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி நடத்தி வருகிறார்கள்.


மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

பதவி ஏற்றதும் தூத்துக்குடி மக்களுக்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ கொடுத்த மேசேஜ் இதுதான்!

தூத்துக்குடி வடக்கு ரதவீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா : திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4 ஆயிரம் பேருக்கு பிரமாண்ட அன்னதானம்!

  • Share on