தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விளாத்திகுளம் பேரூர் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வழிகாட்டுதலின் படியும்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்,
விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், விளாத்திகுளம் பேரூர் கழக திமுக சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.
இதில் பேரூர் கழகத் துணைச் செயலாளர்கள் மீனாட்சி சுந்தரம், வேலுச்சாமி, முனீஸ்வரி, ஒன்றிய பிரதிநிதி: பால்லிங்கம், வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி, அய்யனார், சுப்புராஜ், தமிழரசன், தாளமாணிக்கம், மாரிராஜ், வெங்கடேஷ், சங்கரலிங்கம், ராஜதுரை, முத்துமாரிப்பன், வார்டு உறுப்பினர்கள் சுப்புராஜ், செல்வகுமார், வெங்கடேஷ், பாக முகவர் இளையராஜா (எ) ராஜ், முன்னாள் வார்டு உறுப்பினர் பி.பி.கே.ராமமூர்த்தி, இளைஞர் அணி சின்னத்துரை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




