தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள நகர போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொமுச சார்பில் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று காலை வீட்டில் மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், தனது பிறந்தநாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தி.மு.க சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகள் மிக விமர்சையாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் நகர பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொமுச சார்பில் திமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில், தொமுச செயலாளர் லிங்கசாமி, தலைவர் முருகன், பொருளாளர் மனோகரவேல், வில்சன் பிரேம்குமார், ராஜா, செண்பகராஜ், வேல்முருகன், சரவணன், பெருமாள், சுதாகர், மாரியப்பன், மாடசாமி, சுரேஷ்குமார், ரமேஷ், ஜோன், படையப்பா, பரமசிவன், சுந்தர்ராஜ், ஜெகதீசன், வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




