• vilasalnews@gmail.com

ரூட்டை மாத்துங்க இந்த ரோட்டை பாருங்க ...தூத்துக்குடி மேயர் கொடுத்த அப்டேட் !

  • Share on

தூத்துக்குடி மாநகரத்தின் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆர்வம் காட்டி வருகிறார். 

 

தூத்துக்குடி மாநகரின் 60 வார்டுகளிலும் தரமான சாலை வசதிகளை ஏற்படுத்த மேயர் முன்னுரிமை அளித்து வருகிறார். மேலும்  விடுபட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதேபோல், கடந்த காலங்களில் பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் புதிய வடிகால்கள் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், தூத்துக்குடியைப் பசுமையாக்குவதிலும் நவீன தொழில்நுட்பங்களைப் மேயர் ஜெகன் பெரியசாமி பயன்படுத்தி வருகிறார்.


அதேபோல மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிவதில் மேயர் ஜெகன் பெரியசாமி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பள்ளி கல்லூரிகளுக்கு எளிதாக வந்து செல்லும் படியும் பல்வேறு நடவடிக்கைகளை தூத்துக்குடி மாநகராட்சி எடுத்து வருகிறது. 


அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 4 ஆம் கேட் குறிஞ்சி நகர் பகுதியிலிருந்து தனசேகரன் நகர், ராம் நகர், ரஹ்மத் நகர், மச்சாது நகர், கங்கா பரமேஸ்வரி காலனி, ஜோதி நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் மற்றும் பணிகள் ஆரம்பமாகப் போகும் இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


இந்த ஆய்வின் போது முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாநகராட்சி அலுவலர்கள்  உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

  • Share on

திருச்செந்தூர் திருவிழா: பிரிந்தவர்களைச் சேர்த்தும், உடமைகளை மீட்டுக் கொடுத்தும் அசத்திய தூத்துக்குடி போலீஸ்!

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on