13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.



