• vilasalnews@gmail.com

கொலை வழக்கு... 2 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகளுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 7,500 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II தீர்ப்பு அளித்துள்ளது.


கடந்த 2015ம் ஆண்டு  தூத்துக்குடி  சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் மகன் சேசுராஜா (52) என்பவரை தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான குருசாமி மகன் மாரிச்செல்வம் (41/2025) மற்றும் ஆறுமுகம் மகன் அருண்சிங் (33/2025) ஆகியோரை தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (15.12.2025) மாரிச்செல்வம், மற்றும் அருண்சிங் ஆகிய இருவருக்கும் தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 7,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்து மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக காவலர் சிவன்ராஜ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Share on

மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்... தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை ( டிச.,17 ) குடிநீர் விநியோகம் உண்டா ? அறிவித்தார் ஆணையர்!

  • Share on