• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை ( டிச.,17 ) குடிநீர் விநியோகம் உண்டா ? அறிவித்தார் ஆணையர்!

  • Share on

குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (17.12.2025, புதன்கிழமை)  தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.


தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. ஆகவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

  • Share on

கொலை வழக்கு... 2 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!!

  • Share on