• vilasalnews@gmail.com

பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!!

  • Share on

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். 


தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி சந்தியிர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சண்முகசாமி மகன் வீரபொம்மு (55). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் பைக்கில் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.


தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குமாரகிரி நடுத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ராமசுப்பு (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை ( டிச.,17 ) குடிநீர் விநியோகம் உண்டா ? அறிவித்தார் ஆணையர்!

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் அலங்கார வாகன ஊர்வலம் எப்படி நடத்த வேண்டும்? காவல்துறை அறிவிப்பு!

  • Share on