• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பாஜக சார்பில் மருத்துவ முகாம்!

  • Share on

தூத்துக்குடியில் பாஜக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.


பிரதமரின் பிறந்த தினத்தை இரண்டு வாரங்கள் சேவை தினமாக கடைபிடிக்க சொல்லி தேசிய தலைமை அறிவுறுத்தி உள்ளது அதன் அடிப்படையில் இன்று செப்டம்பர் 28ஆம் தேதி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வடக்கு ராதா வீதியில் உள்ள டி ஏ திருமண மண்டபத்தில் வைத்து மருத்துவ முகாம் மகளிர் அணி சார்பாக நடைபெற்றது.


இதில், 1) ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம் 

2) திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை

3)  ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை

 4)பொது மருத்துவம் 5)புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் சிறப்பு பரிசோதனை முகாம் உள்ளிட்ட மருத்துமனைகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்தனர்.


இதில் மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மகளிரனி மாவட்ட தலைவி வெள்ளைத்தாய், மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் கிழக்கு மண்டல பொறுப்பாளர் சத்தியசீலன், மாவட்ட முன்னாள் பொருளாளர் சண்முகசுந்தரம், பாலமுருகன், டாக்டர் அரவிந்த், மாவட்ட செயலாளர் மாசாணம், உஷா தேவி, செல்வி லட்சுமி, வேல் கனிக்கொறையாரா, ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் மின்தடை... தேதியையும் இடங்களையும் நோட் பன்னிகோங்க!

கரூர் கூட்ட நெரிசல் பலி... தூத்துக்குடியில் காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!

  • Share on