• vilasalnews@gmail.com

கரூர் கூட்ட நெரிசல் பலி... தூத்துக்குடியில் காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!

  • Share on

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில் நேற்றைய தினம் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, செந்தூரப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில், ஐஎன்டி யூசி தமிழ்நாடு தொழிற்சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாய பிரிவு மாநகர மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல் , ஊடகப்பிரிவு மாநில செயலாளர் முத்து மணி, மகிலா காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவி முத்து விஜயா, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ.டி பிரபாகரன, மார்க்கஸ், அருணாச்சலம், மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் கோபால், அந்தோணி ஜெயராஜ், வார்டு தலைவர்கள் முத்துராஜ், சரஸ்வதி நாதன், மகேந்திரன், கருப்பசாமி ,சீனிவாசன், மாரியப்பன், வெள்ளையன், அங்குசாமி, முத்துராஜ், பெனடிக், சிமியோன், ராஜரத்தினம், ஜேம்ஸ், அந்தோணிசாமி, ஜான்சன், ஜெயபிரகாஷ், இசக்கி ராஜா, முருக சங்கர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயமணி சுரேஷ், ஜெயபிரகாஷ், தனுஷ், ரத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

  • Share on

தூத்துக்குடியில் பாஜக சார்பில் மருத்துவ முகாம்!

விளாத்திகுளம் : மாடு வளர்ப்போர், விவசாயிகளுக்கு வந்தது நல்ல சேதி!

  • Share on