• vilasalnews@gmail.com

கிராம உதவியாளர் எழுத்து தேர்வு தேதி மாற்றம் : தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தினால் 03.09.2025 அன்று நடைபெற இருந்த கிராம உதவியாளர்களுக்கான எழுத்து தேர்வு 06.09.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என  மாவட்ட ஆட்சித்லைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலை வாய்ப்பகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் வருகின்ற (புதன்கிழமை) அன்று எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்களின் சுற்றறிக்கை நாள் 04.07.2025 அன்று தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் மாவட்டத்தின் தவிர்க்க முடியாத நிர்வாக காரணத்தினால் 03.09.2025 அன்று நடைபெற இருந்த கிராம உதவியாளர்களுக்கான எழுத்து தேர்வு 06.09.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள அருகில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வுமையத்தின் பெயர் குறிப்பிட்ட நுழைவுச்சீட்டு தபால் மூலம் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களால் அனுப்பி வைக்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி போத்தி விநாயகர் கோவிலில் அன்னதானம் - அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

  • Share on