• vilasalnews@gmail.com

தமிழகத்தில் முதல் தொழிற்சாலை... தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

  • Share on

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை திறந்து மின்சார கார் விற்பனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.


இதைத் தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி – மதுரை புறவழிச்சாலையில் சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி 2024 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டினார்.


தொடர்ந்து, தூத்துக்குடியில் முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் வின்பாஸ்ட் மின்சார விஎப்-6, விஎப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை திறந்துவைக்க இன்று (4ம் தேதி) காலை சென்னையில் இருந்து விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வந்து, தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து, மின்சார கார் விற்பனையை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், மனோதங்கராஜ், தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

நாளை தூத்துக்குடி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. போக்குவரத்து கட்டுப்பாட்டுகள் : மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

ஓட்டப்பிடாரம் அருகே வேன் மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு : டிரைவர் கைது

  • Share on