• vilasalnews@gmail.com

ஆளும் கட்சி முன்னாள் எம்எல்ஏ தவெகவில் ஐக்கியம்.. யார் இந்த டேவிட் செல்வின்!

  • Share on

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் திமுகவில் இருந்து அதிமுகவிற்கு சென்று, பின் அங்கிருந்து விலகி மீண்டும் திமுகவின் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார்.


தூத்துக்குடி  மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் திமுக சார்பில் 1996-ல் சட்டமன்ற உறுப்பினராக வென்ற இவர் பின் அதிமுகவில் இணைந்தார். பின்னர் 2021ல் மீண்டும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் இணைந்துள்ளார்.


தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propagama & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.


இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், "அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீதரன், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் அண்மையில் தவெகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யார் இந்த டேவிட் செல்வின்? 


1991 மற்றும் 2001 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய டேவிட் செல்வின்,


1984, 1989, 1991 ஆகிய 3 சட்டமன்ற தேர்தலிலும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வென்ற டேனியல் ராஜை, 1996 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்து முதல் முறையாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆனார் டேவிட் செல்வின். 


தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான டேவிட் செல்வின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

  • Share on

மதுரை - தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கலாமா ? திடீர் திருப்பம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

  • Share on