• vilasalnews@gmail.com

விடிவெள்ளி குழு மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் அண்டு விழா - எஸ்பி., பங்கேற்பு

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் புனித மைக்கேல் மஹாலில் இன்று (07.03.2021) விடிவெள்ளி தன்னார்வ அமைப்பின் 3 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மது அருந்துவோர் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த மறுவாழ்வு முகாமில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில்,  குடி என்பது ஓரு நோயாகும். நாட்டில் பல குற்றங்கள் குடிக்கு அடிமையாவதால்தான்  நடக்கிறது. குடிபழக்கத்தால் நாம் மட்டுமல்லாது நம் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனக்கட்டுப்பாடு மூலம் அதிலிருந்து மீண்டு வர முடியும். குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி குடி பழக்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும் என்றும், நீங்கள் மீண்டு வந்தால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் நல்லது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை விடிவெள்ளி குழு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிக்கோலஸ் மற்றும் உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த முகாமில் தருவைக்குளம் பங்குதந்தை திரு. எட்வர்ட், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், குளத்துர் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 70 பேர் கலந்து  கொண்டனர்.

  • Share on

வாக்குசாவடி மையங்களை எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொடி அணிவகுப்பு

  • Share on

அண்மை பதிவுகள்