• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் தரிசன கட்டணம் உயர்வு - பக்தர்கள் அதிர்ச்சி!

  • Share on

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக பார்க்கப்படக்கூடிய திருச்செந்தூரில், ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்று.

இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. 

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது

இந்த நிலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருசெந்தூர் கோயிலில் ரூ100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ,2000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.  சாதரண நாளில் ரூ 500 ஆகவும், விஷேச நாளில் ரூ 2,000 ஆக இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ 3,000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சிறப்பு தரிசன் கட்டணம் ரூ. 100 ஆக இருந்த கட்டணம் ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 2022  ல் நிர்ணயித்த சிறப்பு தரிசன கட்டணத்தை திடீரென இன்று உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடியில் மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடியில் சமக தலைவர் படம் கிழிப்பு : சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

  • Share on

அண்மை பதிவுகள்