• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு பைக் நிறுத்துவதில் தகராறு - 2 ரவுடிகள் உட்பட 8 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் வீட்டின் முன்பு பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் பகுதியை சேர்ந்தவர்களான ஏசய்யா மகன் மாதவன் (23) என்பருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சித்திரவேல் மகன் கார்த்திக் (23) என்பவருக்கும் கடந்த 01.04.2023 அன்று வீட்டு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியது சம்மந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மேற்படி கார்த்திக் அவரது நண்பர்களான தூத்துக்குடி தச்சர் தெருவை சேர்ந்த பிரபாகர் மகன் காட்வின் (23), தூத்துக்குடி முத்து தெருவை சேர்ந்த தனபால் மகன் ஆறுமுக கணேஷ் (23), தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரிய அந்தோணி ஆக்னல் (23), தூத்துக்குடி டூவிபரம் பகுதியை சேர்ந்த காசிராஜன் மகன் ராஜேஷ்குமார் (23), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டு மகன் சரவணன் (26), தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்களான கருப்பசாமி மகன் முருகன் (எ) டியோ முருகன் (24) மற்றும் கண்ணன் (எ) கணேசன் மகன் பிரபு (எ) வினோத் குமார் (26) ஆகியோர் சேர்ந்து மேற்படி மாதவன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்து வீட்டில் இருந்த  பொருட்களை சேதப்படுத்தி அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேற்படி மாதவன் நேற்று (03.04.2023) அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து, கார்த்திக், காட்வின், மரிய அந்தோணி ஆக்னல், ராஜேஷ்குமார், ஆறுமுக கணேஷ், சரவணன், முருகன் (எ) டியோ முருகன் மற்றும் பிரபு (எ) வினோத்குமார் ஆகிய 8 பேரையும் கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது மத்திய பாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், காட்வின் மீது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ஆறுமுக கணேஷ் மீது வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்,

மரிய அந்தோணி ஆக்னல் மீது வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா உட்பட 9 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என 11 வழக்குகளும், சரவணன் மீது வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்,

முருகன் (எ) டியோ முருகன் மீது வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 5 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 12 வழக்குகளும்,

பிரபு (எ) வினோத்குமார் மீது வடபாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 8 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

வழிமறித்து தகராறு - இளைஞர் ஒருவர் கைது!

தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் இப்தார் நோன்பு : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

  • Share on

அண்மை பதிவுகள்