• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது!

  • Share on

தூத்துக்குடியில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை  கண்காணிப்பாளர்  சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் நேற்று (15.03.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கருப்பட்டி ஆபிஸ் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி பூபல்ராயர்புரம் பகுதியை சேர்ந்த லூர்துசாமி மகன் ஜெர்விந்த் (24) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் ஜெர்விந்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட ஜெர்விந்த் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.3.12 கோடி வருவாய்!

அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து மதிமுக நிர்வாகிகள் மனு!

  • Share on

அண்மை பதிவுகள்