• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூத்துக்குடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 11 பவுன் செயின் பறிப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு!

  • Share on

தூத்துக்குடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 11 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி புதிய உப்பள காலனியை சேர்ந்தவர் கந்தசாமி, மருந்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி (53). நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி - திருநெல்வேலி ரோடு, மறவன்மடம் பெட்ரோல் பங்க் அருகே செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த 2 சாந்தி கழுத்தில் கிடந்த 11 பவுன் தாலி செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் சென்று விட்டனர்.

கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் பைக்கில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சாந்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

உலக சமாதனம் வேண்டி கோவில்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் 1008 கஞ்சி கலய ஊர்வலம்!

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் தூய்மை பணி : ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்!

  • Share on

அண்மை பதிவுகள்