• vilasalnews@gmail.com

இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் போர்டுக்கு அனுமதி மறுப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

  • Share on

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அனைத்து ஆட்டோ ஸ்டாண்டுகளும்  அவர்களுக்குரிய அமைப்புகளின் ஆட்டோ சங்க போர்டு  அமைத்தே செயல்படுகிறது. 

அவ்வாறு இருக்க, முறைப்படி அரசு பதிவு பெற்று  200 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வரும் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க போர்டு தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுன்டானா மற்றும் தூத்துக்குடி பைபாஸ் FCI குடோன் அருகே டையமன்ட் காலனி முன்பும் வைக்கப்பட்டது.

ஆனால், கடந்த பிப்ரவரி 26ம் தேதி, இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் மேற்படி அவ்விரு பகுதிகளிலும் வைக்கப்பட்ட போர்டை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி, மாநகர் பகுதிகளில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க போர்டை வைக்க அனுமதி தர மறுக்கிறது.

எனக் கூறி, அகற்றப்பட்ட இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்க போர்டை மீண்டும் அதே பகுதியில் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் முன்னிலையில், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதில், இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை பொது செயலாளர் சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் நாராயண் ராஜ், இந்து ஆட்டோ முன்னணி பொறுப்பாளர்கள் செல்வகணேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்  மாரியப்பன், மாவட்டச் செயலாளர் ரவிச்சந்தர், மாவட்ட பொருளாளர் சுப்பு ராயலு, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிரேசன், ஸ்பிக் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, செய்துங்கநல்லூர் மாவட்ட பொறுப்பாளர் திருப்பதி வெங்கடேஷ், கருப்பசாமி, முருகன் பைபாஸ் ஸ்டான்ட் கார்த்திக், கலெக்டர் ஆபீஸ் ஸ்டாண்ட்  ஐயப்பன், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஸ்டாண்ட் முனியசாமி, மாடசாமி தவசு மண்டபம் ஸ்டாண்ட் லட்சுமணன், வேலாயுதம், முருகன் தேவராஜ், ராமன், மாரியப்பன்,  கணேசன், சுயம்புலிங்கம், சாயர்புரம் மோகன்ராஜ், அருண் பாரதி, ராஜ்குமார் கேவிகேநகர்  டிஎம்பி காலனி சுப்பிரமணியன், பூமாடன், பேச்சிமுத்து , சிவபாலன், முருகேசன், துறையரசு, மற்றும் இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட மாநகர உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் சீருடைப் பணியாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

  • Share on

அண்மை பதிவுகள்