• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பிரஸ்கிளப் காலண்டர் : அரசியல்கட்சி பிரமுகர்களுக்கு வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் அச்சிடப்பட்ட  டைரி மற்றும் காலண்டர் அதிகாரிகள், அரசியல்கட்சி பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் ஆண்டுதோறும் டைரி, காலண்டர் அச்சிடப்பட்டு பிரஸ்கிளப் உறுப்பினர்கள், அதிகாரிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல் 2022ம் ஆண்டிற்கான காலண்டர் மற்றும் டைரி வழங்கும் நிகழ்ச்சி பிரஸ்கிளப்பில் வைத்து நடைபெற்று உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னர், அரசியல் கட்சியை சேர்ந்த ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ், சாமுவேல், சுபேந்திரன், மற்றும் பல்வேறு அரசுதுறை சார்ந்த அதிகாரிகள், காவல்துறை, அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பை சார்ந்தவர்களுக்கு தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவரான சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கிராஜா, பொருளாளர் செந்தில்முருகன், துணைச்செயலாளர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர்கள், சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோர் வழங்கினர்.

  • Share on

100 சதவீதம் மானியத்தில் 2 லட்சம் பனை விதைகள் : மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தகவல்!

திருச்செந்தூர் கடற்கரைக்கு செல்ல தடை : வெறிச்சோடியது கடற்கரை!

  • Share on