• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரம் அதிகரிப்பு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

  • Share on

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு இன்று (வியாழக் கிழமை) முதல் கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதேசமயம் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான தடை நீடிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். ஆனால் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டவுடன் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை களின்படி பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவர். தொடர்ந்து இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதாவது இன்று முதல் கூடுதலாக 3 மணிநேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் தமிழக அரசின் அறிவின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான தடை நீடிப்பதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

விளாத்திகுளம் அருகே பஞ்சாயத்து தலைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது!

கனிமொழி எம்.பி யுடன் த.வீ.க.ப.க நிர்வாகிகள் சந்திப்பு!

  • Share on

அண்மை பதிவுகள்