• vilasalnews@gmail.com

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் சேவை மையம் - அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!

  • Share on

தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்தினை  சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்  திறந்து வைத்தார். மேலும் 20 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை தலா ரூ.2000 கொரோனா சிறப்பு நிதியை வழங்கினார்

தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்திற்கு புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் இன்று (30.06.2021) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.


இவ்விழாவில் சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு ரூ.46 லட்சம் மதிப்பில் மருத்துவர் அறை, சமையல் அறை, 5 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு, மனநலம் தொடர்பாக அறிவுரை வழங்கும் அறை, சட்ட பிரிவு அறிவுரை வழங்கும் அறை, மைய நிர்வாகி அறை, தொழில்நுட்ப பணியாளர்கள் அறை மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளுடன் 1985 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் 20 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை தலா ரூ.2000 கொரோனா சிறப்பு நிதியை வழங்கினார்.


பின்னர்  சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் ஒருங்கினைந்த சேவை மையம் துவக்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மையம் பயன்பாட்டிற்கு வந்ததன் மூலம் குறுகிய கால தங்கும் மையம் என்று சொல்லாம். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இந்த மையம் செயல்படும். குடும்பத்தில் மாமியார் - மருமகள் சண்டை, கணவன் - மனைவி கருத்து வேறுபாடு, பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பெண்கள் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். வெளி வந்து எங்கு தங்குவது என்று தெரியாமல் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைகிறார்கள். 

இதுபோன்ற பெண்கள் இங்கு வந்து அவர்களின் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இங்கு வந்து 5 நாள் தங்கலாம். இங்கு அனைத்து வசதிகளும் கழிப்பறை, படுக்கை அறை, சமையல் அறை, தொழில்நுட்ப பணியாளர் அறை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் சேவை மையம் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மனநலம் தொடர்பான ஆலோசனைகளும், சட்டரீதியான ஆலோசனைகள் வழங்க கவுன்சிலர்கள், காவல் துறையினர் இங்கு இருப்பார்கள். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அத்தனை வழக்கு வருகிறது. வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் பெண்களுக்கு இங்கு வந்து தங்கிக்கொள்ளலாம்.


கொரோனா காலத்தில் இதுவரை தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளை கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து நபர்களும் விண்ணப்பம் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் உரிய பயனாளிகளை கண்டறிந்து வருகிறார்கள். 

மாநில அளவில் கொரோனா நோய் தொற்றுக்கு தாய் தந்தை இருவரும் பலியான 93 நபர்கள் விண்ணப்பித்துள்ளர். அதுபோல அவர்களை கண்டறிந்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். அதுபோல தாய் அல்லது தந்தையை ஒருவரை மட்டும் இழந்தவர்கள் மாநில அளவில் இழந்தைவர்கள் 3499 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை தாய், தந்தை இருவரையும் இழந்த நான்கு குழந்தைகளும், தாய் அல்லது தந்தையை ஒருவரை இழந்த 77 குழந்தைகள் இதுவரை விண்ணப்பித்து கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும்  தாய், தந்தை இல்லாமல்  பாட்டி, தாத்தா பராமரிப்பில் இருந்த ஒரு குழந்தை பாட்டி தாத்தாவை இருவரையும் இழந்துள்ளது. இது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் ஒதுக்கீடு வரவர ஊசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்திற்கு நாளை 5000 தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு மக்கள் நல்ல ஆர்வத்துடன் உள்ளார்கள். எல்லா இடத்திலும் மக்கள் தடுப்பூசி வேகமாக போடுவதற்கு தயாராக உள்ளனர். அனைத்து மையங்களும் தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து தொடர்ந்து நிகிலேசன்நகர் பகுதியில்  புறக்காவல் நிலையத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு, உதவி ஆய்வாளர் சங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஆனந்தசேகரன், வட்டாட்சியர் ஜஸ்டின், உறைவிட மருத்துவர் சைலேஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி, உதவி செயற்பொறியாளர்கள் மின் பணிகள் ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் கட்டிடம் விக்னேஸ், மின் பணிகள் விமலா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி மையத்தில் ஒரே நாளில் 1416 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

விளாத்திகுளம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது!

  • Share on

அண்மை பதிவுகள்