• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை : அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

  • Share on

தூத்துக்குடியில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித் தொகை மற்றும்  15 வகையான மளிகைப் பொருட்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதாஜீவன் வழங்கினார்.

கொரோனா நோய் பெருந்தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருக்கோவில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர் களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை ரூ. 4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த தினமான ஜூன் மாதம் மூன்றாம் தேதியன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் 106 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (19.06.2021) நடைபெற்றது. 

நிகழ்ச்சியில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு  ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆனையர் அன்பு மணி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா,உதவி ஆட்சியர் ( பொ) செல்வ நாயகம், வட்டாட்சியர் ஜஸ்டின், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் பணியாளர்கள் சங்க தலைவர் செல்வம் பட்டர்,  மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

4½ வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

தூத்துக்குடியில் வியாபாரியை கொலை செய்ய முயன்ற 7 பேர் ஆயதங்களுடன் கைது

  • Share on

அண்மை பதிவுகள்