• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வீட்டு காம்பவுண்டு வாசல் கேட்டுக்கு பூட்டுப்போட்டதால் வந்த பிரச்சனை : கத்தியால் ஒருவர் கழுத்தறுப்பு!

  • Share on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டு காம்பவுண்டு வாசல் கேட்டுக்கு பூட்டுப்போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த பிரச்சனையைத் தொடர்ந்து ஒருவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 9வது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீட்டில்  பால்பாண்டி மகன் ரவி (49) என்பவர் தனியாக வசித்து வருகிறார். ரவியின் மகன் ஆதீஷ் வேலை முடித்து தினமும் மதியம் 2 மணிக்கு மேல் சென்று தந்தை ரவியை அவரது வீட்டிற்குச் சென்று பார்த்து வருவது வழக்கம். அதே காம்பவுண்டில் குடியிருந்து வந்த கருப்பசாமி மகன் மாரியப்பன் (24) மற்றும் அவரது தந்தையான கருப்பசாமி (50) ஆகியோர் காம்பவுண்டு கேட்டை பூட்டுப்போட்டு பூட்டி வைத்துள்ளனர்.

அதை திறந்து விடுவதற்கு நேரமாவதால் காம்பவுண்டு வாசலை பூட்ட வேண்டாம் என ரவி  கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. 

இதன் காரணமாக நேற்று (18.06.2021) இரவு கருப்பசாமியும், அவரது மகன் மாரியப்பனும் ரவியை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் ரவியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கருப்பசாமி மற்றும் அவரது மகன் மாரியப்பனை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ்க்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர்  அருள் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக் காவலர் பூலையா நாகராஜ், முதல் நிலைக் காவலர்கள்  மாணிக்கராஜ், மகாலிங்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை தூத்துக்குடி வட்டக்கோவில் சந்திப்பில் சம்மந்தப்பட்ட நபரான கருப்பசாமி மகன் மாரியப்பன் (24) என்பவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கருப்பசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா பதவியேற்பு

அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது - ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி பறிமுதல்

  • Share on

அண்மை பதிவுகள்