• vilasalnews@gmail.com

“இரவு முழுவதும் உறவுக்காக கட்டி வைத்தான்” – தோப்புக்குள் தூக்கி செல்லப்பட்ட பெண் கதறல் .

  • Share on
14 வயது பெண்ணை  36 வயதான  வாலிபர் கடத்தி இரவு முழுவதும்  மரத்தில் கட்டி வைத்து பலாத்காரம் செய்ய முயன்றதால் கைது 

புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பேட்டைச் சேர்ந்த 36 வயதான வாலிபர் கார்த்திக் என்பவரின் வீட்டிற்கருகே ஒரு 14 வயது டீனேஜ் பெண் வசித்து வந்தார் .அந்த பெண் போகும்போதும் வரும்போதும் அந்த கார்த்திக் அவர் மீது மோகம் கொண்டார் .அதனால் அந்த பெண்ணை எப்படியாவது அடைய திட்டம் போட்டார் .

அதனால் கடந்த புதன்கிழமை இரவு அந்த பெண் தனியாக வரும்போது அவரின் வாயில் ஒரு துணியை திணித்து அவரை ஒரு மறைவான தோப்புப்பக்கமாக தூக்கி சென்றார் .பிறகு அவரை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தார் .அதன் பிறகு அவரை பலமுறை பலமாக கட்டிப்பிடித்தார் .அதனால் அந்த பெண் அவரிடம் சண்டை போட்டார் ,அவரை எதிர்த்து தாக்கினார் .இதனால் அந்த வாலிபர் நிலை குலைந்து போனார் .பிறகு மீண்டும் அவரை பலாத்காரம் செய்ய முயன்ற போது அந்த வழியே யாரோ வரும் சத்தம் கேட்டது .அதனால் பயந்து போன அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் .

அதன் பிறகு அந்த பெண் பலமாக தன்னை காப்பாற்றுமாறு பலமுறை கத்தியும் அவரின் அலறல் சத்தம் யார் காதுகளுக்கும் எட்டவில்லை .ஏனெனில் அவரின் வாயில் துணியை வைத்து அடைக்கப்பட்டது .அதனால் அந்த இரவு முழுவதும் அவர் அந்த தோப்புக்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தார் .மறுநாள் காலையில் சிலர் அந்த பக்கம் வந்து போது அப்பெண் மரத்தில் கட்டியிருப்பதை பார்த்து அவரை காப்பாற்றினார்கள் .பின்னர் போலீசில் புகாரளிக்கப்பட்டது .போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .

  • Share on

அம்மா அரசு நிச்சயம் விடுதலை வாங்கி தருவார்கள்_பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் உருக்கம்

நிவர் புயலை எதிர்கொள்ள சிதம்பரம், கடலூர் விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

  • Share on