• vilasalnews@gmail.com

போட்டியே இல்லை... வெறும் 6 மனுக்கள் மட்டுமே - தமிழக ராஜ்யசபா தேர்தல் முடிந்தது எப்படி?

  • Share on

தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எவ்வித போட்டியுமின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக சட்டமன்றத்தில் தங்களுக்குள்ள பலத்தின் அடிப்படையில் ஆளும் திமுக 4 இடங்களையும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 2 இடங்களையும் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தொகுதிப் பங்கீட்டின் ஒரு பகுதியாக திமுக தனது வசம் இருந்த இடங்களில் இரண்டை கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கு ஒதுக்கியது. அதேபோல், அதிமுக தனக்கிருந்த இரண்டு இடங்களில் ஒன்றை பாமகவிற்கு வழங்கியது.


இந்த நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மறுபுறம், அதிமுக சார்பில் அக்கட்சியின் தம்பிதுரையும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும் களமிறங்கினர். நிர்ணயிக்கப்பட்ட 6 இடங்களுக்கு இந்த 6 பேர் மட்டுமே பிரதான வேட்பாளர்களாக இருந்ததாலும், மற்ற சுயேச்சை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாலும், இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.

  • Share on

பிரபலம் என்றால் யார்? - கிருத்திகா உதயநிதியின் எக்ஸ் பதிவு : விஜய்யை மறைமுகமாக சாடுகிறாரா?

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 : ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு?

  • Share on