• vilasalnews@gmail.com

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 : ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு?

  • Share on

தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மிக விரைவில் அறிவிக்க உள்ளது.


தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மொத்தம் 824 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. தமிழக முதல்வர் தலைமையிலான தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அதற்கு முன்பாக புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் அண்மையில் சென்னை வந்திருந்தனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் பிற அதிகாரிகளுடன் , வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள், இறுதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.


தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் திருச்சி வருகிறார். இந்த பயணத்தின் போது மிக முக்கியமான அரசியல் அறிவிப்புகள் வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பிரதமர் டெல்லி திரும்பியதும், வரும் மார்ச் 15-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதிகளை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, தேர்தல் அறிவிப்பு மார்ச் 15 ஆம் தேதியும், தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும் ஒரே கட்டமாக நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறலாம் என்ற தகவல் பரவி வருவதால், வரும் வாரங்களில் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

போட்டியே இல்லை... வெறும் 6 மனுக்கள் மட்டுமே - தமிழக ராஜ்யசபா தேர்தல் முடிந்தது எப்படி?

  • Share on