• vilasalnews@gmail.com

முருகனிடம் ஒரே ஒரு வேண்டுதல்... அண்ணாமலையின் பழனி காவடிப் பயணம்!

  • Share on

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விரைவில் குணமடைய வேண்டி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பழனி முருகன் கோயிலில் காவடி எடுத்து வழிபாடு நடத்திய செய்தி அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹெச். ராஜா உடல்நலம் பெற வேண்டி அண்ணாமலை காவடி: பழனி மலையில் உருகிய பிரார்த்தனை!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா, கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உடல்நிலை தேறி வரும் நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.


சாமி தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:


"தைப்பூசத் திருநாளில் தமிழ் கடவுளான முருகப் பெருமானை தரிசிக்க கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு முருகனிடம் ஒரு முக்கியமான வேண்டுதலை வைத்துள்ளேன்.


பாஜகவின் மூத்த தலைவர், 'தர்ம போராளி' என அழைக்கப்படும் ஹெச். ராஜா அவர்கள் விரைவில் உடல்நலம் தேறி வர வேண்டும். கட்சிக்காகப் பல இழப்புகளைச் சந்தித்தவர் அவர். அவர் மீண்டும் முழு ஆரோக்கியத்துடன் திரும்பி வந்து தனது முழு உழைப்பையும் பாஜகவிற்குக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு 100 சதவீதம் உள்ளது."


அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:


ஹெச். ராஜாவின் மூளை ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பிற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் தற்போது கண் விழித்து, குடும்பத்தினருடன் பேசும் நிலையில் தேறி வருகிறார். ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று ஹெச். ராஜாவின் மகள்களிடம் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத்துறையில் பல அதிரடி மாற்றங்கள்... இதோ தெரிந்து கொள்ளுங்கள்!

தமிழ்நாடு ரெட்டி ஜனசங்கத்திற்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து வந்த கடிதம்... ஓ.பி.ஆர்-க்கு சென்னையில் சிலை அறிவித்த தமிழக முதல்வர் !

  • Share on