• vilasalnews@gmail.com

தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரின் தயாரிப்பில் எடப்பாடி பழனிசாமிக்காக உருவான பிரத்யேக பாடல்!

  • Share on

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்காக, தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் உருவாக்கி இருக்கும் பிரத்யேக பாடல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அதிமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். பாடல்கள் கட்டாயம் ஒலிக்கவிடப்படும். அந்தப் பாடல்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் புகழ் பாடலான 'பூமி உள்ளவரை எங்க அம்மா புகழே நிலைத்திருக்கும்' என்ற பாடலும் திரும்ப திரும்ப ஒலிக்கவிடப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடல்கள் மூலம் தொண்டர்களும் உற்சாகம் அடைவார்கள்.


அந்த வகையில், அதிமுகவில் தொண்டராக இருந்து தலைவராக உயர்ந்திருக்கிற எடப்பாடி பழனிசாமிக்காக சில பாடல்கள் எடப்பாடி பழனிசாமியின் புகழ் பரப்பும் வகையில் உருவாக்கப்பட்டு வெளிவந்துள்ளது.


இந்த நிலையில், "வெள்ளை சட்டை போட்டு வந்த வெள்ளை மனம் கொண்டவரையா... பச்ச தூண்டு தலப்பா கட்டி வந்த எங்க பச்ச தமிழன் தானய்யா.." என்ற பாடலை தற்போது சென்னையை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் திருச்சிற்றம்பலம் என்பவர் பிரத்யேக முறை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இப்பாடல் அதிமுகவினரால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.

  • Share on

பொங்கல் திருநாள் - பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை!

தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத்துறையில் பல அதிரடி மாற்றங்கள்... இதோ தெரிந்து கொள்ளுங்கள்!

  • Share on