• vilasalnews@gmail.com

தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி... தங்கப்பதக்கம் வென்று 74 வயது இளைஞர் சாதனை!

  • Share on

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பாலயோகி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில், பூம்சே(கட்டா) 65 வயதிற்கு மேல் உள்ள பிரிவில் திருநெல்வேலி மாவட்ட தேக்வாண்டோ சங்க செயலாளர் மாஸ்டர் ரவீந்திரன் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார்.


டாக்டர் ஐசரி கணேஷ் தலைமையில் இயங்கி வரும் தேக்வாண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக 41வது தேசிய தேக்வாண்டோ போட்டி கடந்த 12, 13, 14 ஆகிய தேதிகளில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பாலயோகி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 


கியுரி மற்றும் பூம்சே என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. பூம்சே(கட்டா) 65 வயதிற்கு மேல் உள்ள பிரிவில் திருநெல்வேலி மாவட்ட தேக்வாண்டோ சங்க செயலாளர் மாஸ்டர் ரவீந்திரன் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். அவரை தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க பொது செயலாளர் கிராண்ட் மாஸ்டர் செல்வமணி, பொருளாார் மாஸ்டர் கோதண்டன், துணை தலைவர் மாஸ்டர் மனோகர், திருநெல்வேலி மாவட்ட தேக்வாண்டோ சங்க தலைவர் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், மாணவ மாணவிகள்  பாராட்டினர். 


74 வயதிலும் தன்னம்பிக்கையோடு தேசிய போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து இந்த காலத்து இளைஞர்களுக்கு முன் உதாரணமாக அமைந்துள்ளார். என பல்வேறு தரப்பினரும் ரவீந்திரனை பாராட்டி வருகின்றனர்.

  • Share on

3 நாட்களுக்கு மேல் அதீத காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் : சுகாதாரத்துறை எச்சரிக்கை

தென்மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

  • Share on