• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

"ரூ.3,500 உதவி தொகை தமிழக அரசு அறிவிப்பு"... பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்!!

  • Share on

தமிழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் மாதம்தோறும் 3,500 ரூபாய் உதவித் தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

விண்ணப்பிக்க தகுதிகள் 01.01.2021 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும் ஆண்டு வருவாய் ரூபாய் 72000 க்குள் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்றிதழ், தமிழ் பணியாற்றிய மைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழ் அறிஞர்கள் இரண்டு பேர் இடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்கின்ற இணையதளத்தில் இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூபாய் 3,500 மருத்துவப்படி ரூபாய் 500 வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

உங்களுடைய விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர்கள் அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக உங்களுடைய விண்ணப் பங்களை அனுப்ப வேண்டும்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

“ஊரடங்கில் என்ன செய்யும் வாயில்லா ஜீவன்கள்?” : வாயில்லா ஜீவன்களின் பசியை போக்க உணவளிக்கும் மதுரை இளைஞர் "கே.எஸ்.கிச்சன்" சங்கர்!!

எட்டு வழிச்சாலை, மீத்தேன் போராட்டம்,பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு!

  • Share on