• vilasalnews@gmail.com

பேரிடர் கால நெறிமுறைகளை கடைபிடித்து கொண்டாடுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

  • Share on

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை பேரிடர் கால நெறிமுறைகளை கடைப்பிடித்து அமைதியாக எளிமையாக கொண்டாடுமாறு அக்கட்சியினரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதியின் பிறந்தநாள்  வர இருக்கும் நிலையில் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் திமுகவினர் அவரவர் இடங்களில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுவெளியில் கருணாநிதியின் பிறந்தநாள் நிகழ்வுகள் எதுவும் நடந்திட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களின் உயிரை காப்பது நம் முன் இருக்கும் தலையாய பணி என்று ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளார் .

ஊரடங்கின் போது உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

உதவிகளை செய்வதற்கு ஏற்ப அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பொருளாதார பேரிடர் நெறிமுறைகளை கடைப்பிடித்து கூட்டம் சேராதவாறு கவனமாக செயலாற்றுமாறு திமுகவினரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share on

கோவை வரும் ஸ்டாலின், திமுகவினருக்கு கொடுத்திருக்கும் அறிவிப்பு!

கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என இருக்காதீர்கள்… ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

  • Share on