• vilasalnews@gmail.com

முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா டிடிவி. தினகரனுடன் திடீர் சந்திப்பு

  • Share on

முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுலகத்தில்  திடீரென சந்தித்தார்.

தூத்துக்குடியில் உள்ள முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா அவர்கள் நேற்றைய தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இசக்கிராஜா அவர்கள் அதிமுக ஆட்சியில் தேவர் சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், உரிமைகளையும், முறையான இட ஓதுக்கீடும் கிடைக்கப்பெறாத நிலை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண டிடிவி தினகரனை அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்துளோம்.

அதிமுக ஆட்சியில் தொடர்ந்து எங்கள் சமுதாய மக்களை புறக்கணித்து வருகின்றனர். சமீபத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களால் அறிவிக்கப்பட்டு சட்டமாக இயற்றப்பட்ட இட ஓதுக்கீட்டினால் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி அன்று கோவில்பட்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிட உள்ளோம் என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தென் மண்டல பொறுப்பாளரும் தேர்தல் பணிக்குழு செயலாளருமான கயத்தாறு ஒன்றிய குழு தலைவர் மாணிக்க ராஜா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர், தென்மண்டல வழக்கறிஞர் அணி செயலாளர் பூல்பாண்டியன், சென்னை பொறுப்பாளர்கள் நாகராஜ், மலையரசன், அகில இந்திய மறவர் அறக்கட்டளை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகேசன், அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகி சேகர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், கண்ணன், உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • Share on

இஸ்லாமியர்களுக்கு 10% இட ஓதுக்கீடு , தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் கட்சிகளுக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு

பாஜக பட்டியல் வெளியாகும் முன்பே நயினார் நாகேந்திரன் வேட்புமனு!

  • Share on