• vilasalnews@gmail.com

விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: தமிழச்சி தங்கபாண்டியன், நாஞ்சில் சம்பத் கடும் எதிர்ப்பு!

  • Share on

சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன்.


விஜய் அரசியலில் அனுபவம் இல்லாதவர் என்றும், அவருக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில், அவர் முதலில் வீட்டிலிருந்து வெளியே வரட்டும். திரிஷாவிடமிருந்து வெளியே வந்தால்தான் எல்லாமே நடக்கும் எனத் தனிப்பட்ட ரீதியில் விமர்சித்தார். மேலும், குடும்பத்துடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்றும் விஜய்க்கு அறிவுரை வழங்கினார். 


இதனையடுத்து, பெண்களைப் பொதுவெளியில் இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில், ஆளும் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர், அரசியல் கருத்துகளை முன்வைக்கும்போது ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது நாகரிகமற்ற செயல். பெண்களைக் கண்ணியமாக நடத்துவதே முறையான அரசியல் என்றார்.


அதேபோல தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாஞ்சில் சம்பத் விடுத்துள்ள அறிக்கையில்,


ஒரு தேசியக் கட்சியின் தலைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை நாகரிகம் கூட நயினார் நாகேந்திரனிடம் இல்லை. தேர்தலில் சிக்கிய 4 கோடி ரூபாய் விவகாரத்தைக் குறிப்பிட்டு, தன் முதுகில் உள்ள கறையைக் கழுவ முடியாதவர் ஊருக்கு உபதேசம் செய்கிறார் எனச் சாடினார்.


விஜய்யின் அரசியல் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டாம் என்றும், பெண்களை இழிவுபடுத்தினால் தமிழகப் பெண்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.


அரசியல் ரீதியாக விமர்சிக்கப் பல வழிகள் இருந்தும், ஒரு பெண்ணின் பெயரையும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொதுவெளியில் இழுப்பது அநாகரிகமானது எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவெக தொண்டர்களும் இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராகத் திரண்டுள்ளனர்.  தற்போது, அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தோல்வி பயத்தால் வந்த 'பேட்ச் ஒர்க்' - ரூ.5,000 திட்டத்தை வறுத்தெடுத்த எடப்பாடியார்!

2026 தமிழக தேர்தல்: திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல்? புதிய கூட்டணிக் கணக்குகள் தீவிரம்!

  • Share on