• vilasalnews@gmail.com

கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் தவெக: "29-க்கு 29" – சபதம் ஏற்ற செங்கோட்டையன்!

  • Share on

தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கோவையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த நிர்வாகியும் அரசியல் முதிர்ச்சி கொண்டவருமான செங்கோட்டையன் பேசிய பேச்சு, தற்போது அரசியல் வட்டாரங்களில் "ஹாட் டாபிக்" ஆக மாறியுள்ளது.


வழக்கமாக அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், இந்த முறை 'விசில்' சின்னம் பலமாக ஒலிக்கும் என்பதை செங்கோட்டையன் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.


"கொங்கு மண்டலத்திலுள்ள 29 தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறித்துத் தலைவர் விஜய்யின் காலடியில் சமர்ப்பிப்பேன்."2026-ல் தலைவர் விஜய் யாரைக் கைகாட்டுகிறாரோ, அவரே சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவார் எனத் தொண்டர்களிடையே உற்சாகத்தைப் பாய்ச்சினார்.


திமுக அமைச்சர்கள் பலரின் சொந்த மாவட்டமான கோவையில் நின்றுகொண்டே, அவர்களைக் கடுமையாகச் சாடினார் செங்கோட்டையன். "ஆளுங்கட்சி அமைச்சர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து கூட்டத்தைக் கூட்டும் திமுக மாநாடுகளில் இல்லாத எழுச்சி, ஒரு பைசா செலவில்லாமல் இங்கே திரண்டிருக்கும் மக்களிடம் காணப்படுகிறது," என்றார்.


அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பிறகு, தனக்கு 20 வயது குறைந்திருப்பதாகவும், ஒரு இளைஞனுக்குரிய புத்துணர்வோடு களம் காண்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தமிழகத்தின் சீர்குலைந்துள்ள சட்ட ஒழுங்கு, முடிக்கப்படாத மேம்பாலப் பணிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை முன்வைத்து அவர் தமிழக அரசை விமர்சித்தார்.


எம்.ஜி.ஆர் அரசியல் நுழைவின் போது எழுந்த அதே விமர்சனங்களை விஜய் இன்று எதிர்கொள்வதாகவும், இறுதியில் எம்.ஜி.ஆர் படைத்த அதே வெற்றியை விஜய்  படைப்பார் என்றும் ஒப்பிட்டுப் பேசினார். ஒரு லட்சம் ரூபாய் வரை சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து மக்கள் தவெகவிற்கு வாக்களிக்கத் தயாராக  உள்ளதாகத் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  • Share on

"புலி" கொடுத்த மரண அடி? - அரசியலில் நுழைந்த விஜய்க்கு காத்திருந்த பெரிய 'செக்'!

விஜய் - எடப்பாடி பழனிசாமி ரகசிய சந்திப்பு : ரகசியத்தை உடைத்த கடம்பூர் ராஜூ!

  • Share on