• vilasalnews@gmail.com

கருப்பு டூ வெள்ளை : சிபிஐ வளையத்தில் விஜய்... மிரட்டலா? சமரசமா? ஒரு அதிரடி ரிப்போர்ட்!

  • Share on

தமிழக அரசியலில் 'தளபதி'யாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்க்கு, ஆரம்பமே அதிரடிச் சோதனையாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 உயிர்கள் பறிபோனது, இப்போது அக்கட்சியின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது.


கருப்புச் சட்டை கொடுத்த 'கெத்து'!


கடந்த 12-ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு முதல்முறை ஆஜரான விஜய், கறுப்பு நிற உடையில் தோன்றினார். வழக்கமாக வெள்ளைச் சட்டை அல்லது காவி நிற பேண்ட் அணியும் விஜய், சிபிஐ விசாரணைக்கு மட்டும் ஏன் கருப்பு அணிந்து வந்தார்?


"இது தற்செயலானது அல்ல; மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான குறியீடு. நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்பதைத் தான் தலைவர் தனது சட்டையின் நிறத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்" எனத் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மார்தட்டினர்.


7 மணி நேர 'கிடுக்கிப்பிடி' விசாரணை!


ஆனால், அந்த 7 மணி நேர விசாரணை சாதாரணமானதாக இல்லை என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர். விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் ஏவுகணைகளாகப் பாய்ந்துள்ளன.


"கூட்டத்திற்குத் தாமதமாக வரச் சொல்லி உங்களுக்கு ஐடியா கொடுத்தது யார்?"


"லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறியது ஏன்?"


"கட்சி மாநாட்டிற்கும், கூட்டங்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் எங்கிருந்து வருகிறது?"


"உங்கள் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பின்னணி என்ன?"


இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் விஜய் தரப்பு திணறியதாகக் கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவுடன் அன்று விசாரணை முடிந்தது.


இன்று மாறிய நிறம்... ஆடிப்போன தம்பிகள்!


இந்நிலையில், இன்று (ஜனவரி 19) மீண்டும் விசாரணைக்கு ஆஜரான விஜய், முற்றிலும் மாறாகத் தனது வழக்கமான வெள்ளை நிறச் சட்டையில் வந்து இறங்கியுள்ளார். இதைப் பார்த்ததும் இணையதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன.


நெட்டிசன்களின் கேள்வி என்ன?


கருப்புச் சட்டை போட்டுப் போரிட்டவர், ஒரே நாளில் வெள்ளைச் சட்டைக்கு மாறியது 'சமாதானமாகப் போகிறேன்' என்பதன் அறிகுறியா?


7 மணி நேர விசாரணையில் சிபிஐ காட்டிய ஆதாரங்களைக் கண்டு விஜய் மிரண்டு போய்விட்டாரா?


பாஜக-வை எதிர்க்கத் துணிவில்லாமல் வெள்ளைக்கொடி காட்டிவிட்டாரா விஜய்?


அரசியல் சதுரங்கம்


விஜய்யின் இந்த 'வெள்ளை உடை' மாற்றத்தை வெறும் ஆடை மாற்றமாக மட்டும் பார்க்க முடியாது. இது விசாரணை அதிகாரிகளிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்க எடுக்கும் முயற்சியாகவும் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம், "விஜய் தனது இயல்பான நிறத்திற்குத் திரும்பிவிட்டார், இதில் அரசியல் இல்லை" என அவரது ஆதரவாளர்கள் முட்டுக்கொடுக்கின்றனர்.


விசாரணை வளையம் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் புஸ்ஸி ஆனந்த் வரை நீண்டுள்ள நிலையில், விஜய்யின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? கருப்புச் சட்டை கொடுத்த தைரியம், வெள்ளைச் சட்டையில் தொடருமா? அல்லது சிபிஐ-யின் பிடி இன்னும் இறுகுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

  • Share on

விஜயை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்... யாருக்கு மாற்று தவெக?

ஸ்டாலின் தொடரட்டும்; தமிழகம் வெல்லட்டும்... திருச்சியில் திமுக மாநில மாநாடு!

  • Share on