• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி நிலவரம்... 8 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது!

  • Share on

ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கடந்த பிப் 4 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், அதிமுக மூத்த தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் ஹிமாச்சல பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு வாடகை கார் ஒன்றில் கடந்த 4 ஆம் தேதி பயணம் செய்தபோது கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட திருப்பூர் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத கின்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காகச் சிம்லா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, விபத்தில் சிக்கி காணாமல் போன வெற்றி துரைசாமியை தேடும் பணியில் காவல்துறை, ராணுவம், விமானப்படை மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் என பெரும் படையே களமிறக்கப்பட்டு கடந்த 8 நாட்களாகத் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 8வது நாளான இன்று விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை மீட்ட படையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாக, வெற்றி துரைசாமி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

நெருக்கடியில் தேமுதிக... இறங்கி வந்த பிரேமலதா விஜயகாந்த்! காரணம் இதுதானாம்!

விஜயதாரணி எம்எல்ஏ காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைவாரா? மாட்டாரா?அவரே கொடுத்த விளக்கம் இது!

  • Share on