• vilasalnews@gmail.com

தேர்தலில் அதிபர் ஜோ பைடனுடன் கூட்டணி...அதிர்வை கிளப்பிய சீமான்!

  • Share on

ஓரிரு தினங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சாட்டை துரைமுருகன் மட்டுமல்லாமல் மேலும் சில நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளிலும் அடுத்தடுத்து இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது ஒருபுறம் இருக்க, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட சிலரை வைத்து நாம் தமிழர் கட்சியை உடைக்க முயற்சி நடப்பதாகவும் கடந்த சில தினங்களாக பேச்சும் வரும் நிலையில், சேலம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜராகிவிட்டு வந்த சீமானிடம் இதுகுறித்த நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:

நாம் தமிழரை முடக்க பார்க்கிறார்களா? முடக்கவும், மடக்கவும் நான் என்ன குடையா? இது எழுச்சிமிகுந்த புரட்சி படை. இதெல்லாம் சும்மா ஒரு அச்சுறுத்தல் தானே, அஞ்சுவதும், அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது என்று சொல்லி வளர்த்த தலைவனின் பிள்ளைகள் நாங்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவோமா? 

திருட்டுப் பயன், ஊரை அடிச்சு உலையில் போடுறவன், மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறவன். இவனுங்களே பயப்படாம நாட்டுல உலாவிட்டு இருக்கும் போது, நாங்க ஏன் பயப்படணும்? என்றார்.

மேலும்,,வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் ஏதேனும் கூட்டணி வாய்ப்பு என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, " அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூட்டணி போடலாம் என கிண்டல் அடித்து சிரித்து விட்டு, 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார்".

  • Share on

தமிழ்நாட்டில் மத சிறுபான்மை கிறித்தவ மக்கள் வாக்குகள் யாருக்கு?

அதிமுகவிற்கு ஆதரவு.... நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கும் சந்தனப்பிரியா பசுபதி பாண்டியன்?

  • Share on