• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

தூண்டில் வளைவு, கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு பணிகளுக்கான பூமி பூஜை : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

  • Share on

தாழையில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும் வீரபாண்டியன் பட்டணத்தில் கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்பு மற்றும் வீரபாண்டியன்பட்டணத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கி.செந்தில் ராஜ்,  தலைமையில் இன்று (18.11.2020) நடைபெற்றது. கட்டுமான பணிகளுக்கான பூமி நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

நிகழ்ச்சியில்  அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை பகுதி மக்கள் வைக்கின்ற கோரிக்கை அனைத்தையும் அரசு கனிவுடன் பரிசிலித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையிலே புரட்சித்தலைவி அம்மா வழியிலே முதலமைச்சர் அவர்களும் தமிழகம் முழுவதும் திட்டங்கள் நிறைவேற்றினாலும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றிய அரசு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு.

பெரியதாழை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ரூ.30 கோடி செலவில் தூண்டில் வளைவு விரிவாக்கப்பட உள்ளது. இங்கு ஏற்கனவே அமைந்துள்ள தூண்டில் வளைவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் அமைக்கப்பட்டது. அதை விரிவாக்கித் தர வேண்டும் என்ற வகையில் கோரிக்கை அடிப்படையில் தற்போது பணிகள் துவக்கப்பட்டது.

தூண்டில் வளைவு விரிவாக்கம் வேண்டும் என இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை வைத்தார்கள். மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் நானும் மீன்வளத்துறை அமைச்சரிடம் கவனத்திற்கும், முதலமைச்சரின் கவனத்திற்கும் எடுத்து சென்று இத்திட்டத்தினை வலியுறுத்தினோம். அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியில் அறிவித்தார்கள். அதற்கான ரூ.30 கோடி நிதியையும் ஒதுக்கி அரசாணையையும் வெளியிட்டு சுற்றுச்சூழல் துறையின் தடையில்லா சான்று பெறப்பட்டு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்று முறையாக பூமி பூஜை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு முதல் நிகழ்ச்சியாக இதில் பங்கேற்றுள்ளார். தூத்துக்குடியில் தூண்டில் வளைவு விரிவாக்க திட்டம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் நபாடு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று ஆலந்தலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு திட்டம் ஒப்பந்தப்புள்ளிகள் முடிக்கப்பட்டு துவங்கும் நிலையில் உள்ளது. அது மத்திய அரசின் சுற்றுசூழல் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சான்றிதழ் பெற்றவுடன் திட்டம் தொடங்கப்படும். முதலமைச்சர் 11ம் தேதி தூத்துக்குடி வந்தபோது மணப்பாடு மக்களின் கோரிக்கையை ஏற்று மணல் திட்டுக்கள் நிரந்தரமாக அகற்றுவதற்கு, தூண்டில் வளைவு அமைப்பதற்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.

வீரபாண்டியன்பட்டணம் மக்களின் கோரிக்கையை ஏற்றும் கடற்கரை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அலை தடுப்பு சுவர் நீட்டிப்பு பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை நீண்ட கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கு தேவையான அனைத்து வாழ்வாதார திட்டங்களும் செயல்படுத்தப்படும். பெரியதாழை கிராமத்தில் உள்ள 23 நபர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து 400 நபர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

அம்மாவின் அரசு மீனவர்களின் நலன்காக்கும் அரசாகும். பெரியதாழை பகுதியில் குப்பைகளை அகற்ற டிராக்டர் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் டிராக்டர் வழங்கப்படும். மேலும் இப்பகுதியில் உள்ள சாலை மேம்படுத்தப்படும். கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. எனவே அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். முககவசம் உயிர் கவசம் ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் முககவசங்கள் வழங்கினார். நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் தீபா, உதவி இயக்குநர் வயல்லா, மீன்வளத்துறை செயற்பொறியாளர் முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் தயாநிதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் அஜித், பெரியதாழை அருட்தந்தை சுசீலன், பெரியதாழை ஊர் தலைவர்கள் ஜோசப், அசோக், லூர்தையா, நாட்டுப்படகு சங்க தலைவர் கயஸ், சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, திருச்செந்தூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வி வடமலை பாண்டியன், துணைத் தலைவர் ரெஜிபன்ட் பர்ணான்டோ, வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் எல்லைமுத்து, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியின் தலைவர் ராஜினாமா!

வெள்ளாரம் கிராம குளத்தை சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

  • Share on