• vilasalnews@gmail.com

சிறுமி படுகொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!

  • Share on

8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட கல்விளை பகுதியைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (26) என்பவரைச் சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகன்  தீர்ப்பளித்தார். அதில், முத்தீஸ்வரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கம் : ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

கடைகளில் குழந்தைகள் வேலை செய்தால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை!

  • Share on