• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மணி நேரத்தில் பதிவான வாக்குகள்... எந்த தொகுதி டாப்?

  • Share on

தமிழகத்தில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற விபரம் வெளிவந்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் தொகுதி வாரியாக பார்க்கும் போது, காலை 9 மணி நிலவரப்படி  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 18.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 16.51 சதவீத வாக்குகளும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 16.45 சதவீத வாக்குகளும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 14.87 சதவீத வாக்குகளும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 16.29 சதவீத வாக்குகளும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 17.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.


மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வருவது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் வேட்பாளர் வீட்டில் ரூ.65 லட்சம் சிக்கியதால் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்!

  • Share on